டபுள்டெக்கர் பேருந்து கவிழ்ந்து விபத்து; 19 பேர் பலி

டபுள்டெக்கர் பேருந்து கவிழ்ந்து விபத்து; 19 பேர் பலி
 | 

டபுள்டெக்கர் பேருந்து கவிழ்ந்து விபத்து; 19 பேர் பலி


சீனாவின் ஹாங் காங் நகரில் இன்று ஏற்பட்ட ஒரு பேருந்து விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து ஒரு மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

மீட்புப் படையினர் அங்கு விரைந்து, பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்க முயற்சி செய்தனர். 19 பேர் இந்த விபத்தில் பலியானதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் 17 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். 

விபத்தின் காரணம் சரியாக தெரியாத நிலையில், வேகமாக சென்றதால் பேருந்து கவிழ்ந்திருக்கலாம் என மீட்கப்பட்ட ஒரு பயணி கூறினார். "பேருந்து வேகமாக சென்றது போல இருந்தது. வழக்கமாக செல்வதை விட வேகமாக சென்றதாக நான் உணர்ந்தேன்" என அவர் கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP