மனைவி கர்ப்பமாக இருந்தபோது கள்ளத்தொடர்பு... ட்ரம்ப்புக்கு எழும் நெருக்கடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது தனிப்பட்ட விவகாரங்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுடன், தொலைபேசியில் பேசிய ஆடியோ லீக்கானதில், பிளேபாய் பத்திரிகையின் மாடலுடனான கள்ளத்தொடர்பை மறைக்க பணம் கொடுக்க சொன்னது தெரிய வந்துள்ளது.
 | 

மனைவி கர்ப்பமாக இருந்தபோது கள்ளத்தொடர்பு... ட்ரம்ப்புக்கு எழும் நெருக்கடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது தனிப்பட்ட விவகாரங்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுடன், தொலைபேசியில் பேசிய ஆடியோ லீக்கானதில், பிளேபாய் பத்திரிகையின் மாடலுடனான கள்ளத்தொடர்பை மறைக்க பணம் கொடுக்க சொன்னது தெரிய வந்துள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும்போது, ட்ரம்ப்  பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக செய்திகள் வெளியாகின. பல பெண்கள், தங்களை ட்ரம்ப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தங்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டினார்கள். தேர்தலுக்கு பின், கேரன் மெக்டூகல் என்ற பிளேபாய் மாடல், ட்ரம்ப்புடன் தனக்கு நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அவரின் தற்போதய மனைவி மெலானியா ட்ரம்ப், கர்ப்பமாக இருந்தபோது, இருவரும் ஒன்றாக இருந்ததாகவும் தெரிவித்தார். 

அதிபர் தேர்தலில் ட்ரம்ப் நிற்கும்போது, கேரன் தங்களது தொடர்பு குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதற்காக அந்த நிறுவனம் அவருக்கு 150,000 டாலர்கள் கொடுத்தது. ஆனால், ட்ரம்ப்புக்கு ஆதரவான அந்த செய்தி நிறுவனம், அந்த பேட்டியை வெளியிடவில்லை. இதைத் தொடர்ந்து, கள்ளத்தொடர்பு விஷயம் வெளியாகிவிட கூடாது என்பதற்காக, அந்த செய்தி நிறுவனம் மூலம், மாடலுக்கு 150,000 டாலர்களை ட்ரம்ப் கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது, ட்ரம்ப்பின் வழக்கறிஞர் கோஹன் பணம் கொடுத்ததை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். 

தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளர் அனைத்து தேர்தல் செலவுகளையும் வெளிப்படையாக செய்யாவிட்டால் அது சட்டப்படி குற்றமாகும். அதனால், ட்ரம்ப்புக்கு தெரியாமல் தானே அந்த பணத்தை கொடுத்ததாக கோஹன் கூறினார். இதனால், மைக்கேல் கோஹன் மீது விசாரணை துவக்கப்பட்டு, அவரின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அதில் பல ஆடியோ பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ட்ரம்ப் தொடர்பான 12 தொலைபேசி கால்களை கோஹன் பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிய வந்தது. அதில், ஒரு ஆடியோ பதிவை சி.என்.என் நிறுவனம் வெளியிட்டது. 

இத்தனை நாட்களாக, அந்த பெண்ணுடன் தனக்கு கள்ளத்தொடர்பு கிடையாதென்றும், அவருக்கு அளிக்கப்பட்ட பணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் ட்ரம்ப் கூறி வந்தார். ஆனால், தற்போது அந்த தொலைபேசி காலில், அந்த பெண்ணுக்கு பணம் அளிக்கப்படுவது குறித்து ட்ரம்ப் பேசுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

ஏற்கனவே, ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இடையே விரிசல் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த ஆடியோ பதிவால் மேலும் அது அதிகரித்துள்ளதாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP