அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து; 11 பேர் பலி

அமெரிக்காவின் முசௌரி மாகாணத்தில் உள்ள ஏரி ஒன்றில் பயணித்த படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து; 11 பேர் பலி

அமெரிக்காவின் முசௌரி மாகாணத்தில் உள்ள ஏரி ஒன்றில் பயணித்த படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்கா முசௌரி மாகாணம் பிரான்சன் என்ற நகரில் புகழ்பெற்ற டேபிள் லாக் என்ற ஏரி உள்ளது. இங்கு நேற்று இரவு 30 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஏரியில் மூழ்கிய 3 குழந்தைகள் உட்பட 7 பேர் மீட்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், காணாமல் போன மீதியுள்ள நபர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP