வானில் கழன்று விழுந்த விமான என்ஜின்... பெரும் விபத்து தவிர்ப்பு!

அமெரிக்காவில் விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருக்கும் போதே விமானத்தின் என்ஜின் கழன்று விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த பயணிகளுக்கும் பாதிப்பில்லாமல் விமானம் தரையிறக்கப்பட்டது.
 | 

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து ஹவாய் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் வானத்தில் சென்று கொண்டிருக்கும் போது முதலில் ஒரு சத்தம் கேட்டுள்ளது. அதைத்தொடர்ந்து விமானத்தில் சிறிய அசைவுகளும் ஏற்பட்டுள்ளன. இதை பெரிதுபடுத்தாமல் விமானி விமானத்தை ஓட்டியுள்ளார். சிறிது நேரம் சரியான நிலையிலே சென்ற விமானம் ஒரு கட்டத்தில் பலத்த சத்தம் ஏற்பட்டது. பின்னர் விமானிகள் சோதித்து பார்த்ததில் என்ஜினின் ஒரு பகுதி கழன்று விழுந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியிலும் கலக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து பயணிகளை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு விமானத்தின் எஞ்சியுள்ள என்ஜின்களை வைத்து பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் என்ஜின் கோளாறு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் எனவும் இந்த கோளாறால் எந்த பயணிக்கும் பாதிப்பில்லை எனவும் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் 363 பயணிகள், 2 விமான ஓட்டிகள், 8 பணியாளர்கள் பயணித்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP