ரஷ்யா மீது நடவடிக்கை; பிரிட்டனுக்கு அமெரிக்கா ஆதரவு

முன்னாள் ரஷ்ய உளவாளி மீது பிரிட்டனில் நடத்தப்பட்ட கொலை முயற்சி விவகாரத்தில், பிரிட்டன் அரசு ரஷ்யா மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலில் ரஷ்யாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்காத அமெரிக்க அரசு, தற்போது, பிரிட்டன் செய்வது சரிதான் என கூறியுள்ளது.
 | 

ரஷ்யா மீது நடவடிக்கை; பிரிட்டனுக்கு அமெரிக்கா ஆதரவு

ரஷ்யா மீது நடவடிக்கை; பிரிட்டனுக்கு அமெரிக்கா ஆதரவு

ரஷ்ய முன்னாள் உளவாளி மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி விவகாரத்தில், ரஷ்யா மீது பிரிட்டன் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலில் ரஷ்யாவுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்காத அமெரிக்க அரசு, தற்போது, பிரிட்டன் செய்வது சரிதான் எனக் கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம், ரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் லூலியா மீது ரசாயன விஷப் பொடி வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கொலை முயற்சி, ரஷ்ய அரசின் உத்தரவுபடி நடந்து இருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து ரஷ்யா பதிலளிக்க வேண்டுமெனப் பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார். ஆனால், ரஷ்யா மவுனம் காத்துவருகிறது. இதைத் தொடர்ந்து ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கத் துவங்கியது பிரிட்டன். முதல் கட்டமாக, பிரிட்டனில் உள்ள 23 ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற வேண்டும் என தெரசா மே உத்தரவிட்டார்.

ஆரம்பத்தில், இந்தக் கொலை முயற்சிக்கு ரஷ்யா காரணமாக இருக்கலாம் என அமெரிக்க அரசு கூற மறுத்துவிட்டது. ரஷ்யாவுக்கு எதிராகப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அடுத்த நாளே நீக்கப்பட்டார். ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவிக்க அமெரிக்க அரசுக்கு பல தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராகப் பிரிட்டன் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா தனது நட்பு நாடான பிரிட்டனுக்கு இந்த விஷயத்தில் முழு ஆதரவு தெரிவிக்கிறது. அவர்கள் எடுக்கும் நடவடிக்கை நியாயமானதுதான்" எனக் கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP