13 குழந்தைகளை சங்கிலியில் கட்டி வைத்து சித்தரவதை செய்த பெற்றோர்!

13 குழந்தைகளை சங்கிலியில் கட்டி வைத்து சித்தரவதை செய்த பெற்றோர்!
 | 

13 குழந்தைகளை சங்கிலியில் கட்டி வைத்து சித்தரவதை செய்த பெற்றோர்!


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது குழந்தைகளை சங்கிலியில் வீட்டில் கட்டி வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

56 வயதான டேவிட் துர்பின் மற்றும் 49 வயதான லூயிஸ் துர்பின் தம்பதியினர் கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்களது மகள், வீட்டில் இருந்து தப்பித்து போலீசிடம் தஞ்சமடைந்தார். அவர் உடல் முழுக்க காயங்களுடனும், சரியாக சாப்பிடாமல் உடல்நலம் பலவீனமாகவும் இருந்துள்ளார். தனது பெற்றோர் தன்னையும் தனது சகோதரர் சகோதரிகளையும் வீட்டிலேயே கட்டி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது மேலும் 12 பேர் அந்த வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 வயது முதல் 29 வயது வரை உள்ள அந்த தம்பதியின் குழந்தைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தனர்.

பெற்றோர்கள் தங்களை சங்கிலியில் கட்டி வைத்து, அடித்து சித்தரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர்ளுக்கு சரியாக சாப்பாடு கொடுக்காமல், குளிக்க விடாமல், வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர். மருத்துவர்களையும் வீட்டுக்கு வர விடுவது கிடையாதாம். 

ஆனால், துர்பின் தம்பதியினர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP