இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்: நேரில் கண்டுரசித்த விஜய் மல்லையா!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியை ஓவல் மைதானத்தில் அந்நிய செலவாணி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா கண்டுகளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 | 

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்: நேரில் கண்டுரசித்த விஜய் மல்லையா!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியை ஓவல் மைதானத்தில் அந்நிய செலவாணி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா நேரில் கண்டு ரசித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டத்தை கண்டு ரசிப்பதற்காக விஜய் மல்லையா செல்வது போன்ற விடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஓவல் மைதானத்தின் நுழைவு வாயில் அருகே காரில் வந்திறங்கும் மல்லையா, மைதானத்துக்குள் செல்ல அனுமதிச்சீட்டை காண்பித்து செல்வது போல பதிவாகியுள்ளது. கிரிக்கெட் போட்டியில் ஆர்வமுள்ள விஜய் மல்லையா கிரிக்கெட் போட்டியை நேரில் பார்ப்பது முதல்முறையல்ல. இது போல பல முறை அவர் போட்டிகளை கண்டுள்ளார். கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியை விவிஐபி இருக்கையில் அமர்ந்து அவர் கண்டு ரசித்தார். 

பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, நாடு கடத்தக் கோரும் வழக்கை இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வருகிறார். அவரை நாடு கடத்த சிபிஐ கோரியுள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள சிறைகளில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி விஜய் மல்லையா தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய் மல்லையாவை அடைக்க திட்டமிடப்பட்டுள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் போதிய பாதுகாப்பும், அனைத்து வசதிகளும் இருக்கின்றன என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரமாக விடியோவை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.

வாங்கிய கடன்களை தான் திருப்பி அளிக்க முயற்சி செய்து வருவதாகவும், அரசியல் காரணங்களுக்கான தான் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதாகவும் விஜய் மல்லையா கூறி வருகிறார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP