நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவு!

வங்கிக் கடன் மோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நீரவ் மோடியை கைது செய்ய, லண்டன் நீதிமன்றம் இன்று பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவு!

வங்கிக் கடன் மோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நீரவ் மோடியை கைது செய்ய, லண்டன் நீதிமன்றம் இன்று பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில்  13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல், தொழிலதிபர் நீரவ் மோடியும், அவரது உறவினரான முகுல் சோக்ஷியும் பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசின் உள்துறை அமைச்சகத்திடம் அமலாக்கத் துறை வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த நிலையில், நீரவ் மோடியை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று லண்டன்  நீதிமன்றம் இன்று பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் சில நாட்களில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீரவ் மோடி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் எனத் தெரிகிறது.

நீரவ் மோடி தனது முக அடையாளங்களை மாற்றிக் கொண்டு லண்டன் மாநகர வீதிகளில் சுதந்திரமாக சுற்றி திரிந்து வருவது தொடர்பான செய்தி ஊடகங்களில் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP