இறந்த மகனின் விந்தணு எடுத்து பேரன் - உரிமைக்காக போராடும் தம்பதி!

பிரிட்டனைச் சேர்ந்த செல்வந்தர் தனது இறந்த மகனின் விந்தணுக்கள் மூலம் வாடகைத் தாயின் வழியாக பேரக்குழந்தை பெற்றெடுத்து வளர்த்து வருகின்றனர். ஆனால் இது முறைகேடான செயல் என அந்நாட்டு சட்டம் கூறுவதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
 | 

இறந்த மகனின் விந்தணு எடுத்து பேரன் - உரிமைக்காக போராடும் தம்பதி!

பிரிட்டனைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் தங்களது இறந்த மகனின் விந்தணுக்கள் மூலம் வாடகைத் தாயின் வழியாக பேரக்குழந்தை பெற்றெடுத்து வளர்த்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த வயதான தம்பதியின் ஒரே மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். தம்பதியினருக்கு மகனின் இழப்பு ஒருபுறம் இருக்க, இனி மகன் வழியில் பேரப் பிள்ளைகளை பெற முடியாது என்ற துயரமும் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், விந்தணுக்கள் உறைய வைப்பது, கரு முட்டைகள் மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் நவீன சிகிச்சைமுறைகள் குறித்து விசாரித்த அந்த தம்பதி இதன் மூலம் தங்களது கவலைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பினர். பின் தங்களது மகனை அடக்கம் செய்வதற்கு முன்பாக அவனது விந்தணுக்களை நிபுணர்கள் கொண்டு எடுத்து பதப்படுத்த ஏற்பாடு செய்தனர்.

அதன்படி, சிறுநீரகவியல் நிபுணர் ஒருவர் மூலம், விந்தணுக்கள் எடுக்கப்பட்டு உறைநிலையில் பதப்படுத்தப்பட்டது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முயற்சித்தபோது, பிரிட்டனில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது சட்டவிரோதம் என்பதால், இந்த சிகிச்சைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

அதனால், விந்தணுவை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு கருத்தரித்தல் மையத்திற்கு கொண்டு சென்று, விந்து செல்களுடன் தானமாக பெறப்பட்ட கருமுட்டைகளை சேர்த்து, ஆய்வகத்தில் கரு வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கேயே வாடகைத் தாய் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருடைய கருப்பையில் குழந்தை வளர்க்கப்பட்டது. 2015ம் ஆண்டு அவர்களுக்கு அழகான பேரன் பிறந்தான்.

அவனை இங்கிலாந்தில் வைத்து வளர்க்க அவர்கள் விரும்பினர். இதனால், சட்டப் பூர்வமாக தங்கள் பேரன் என்று அறிவிக்க பிரிட்டன் அரசில் விண்ணப்பித்தனர். ஆனால், பிரிட்டன் அதிகாரிகளோ குழந்தைக்கு சான்றிதழ் வழங்க மறுத்து வருகிறது. பிரிட்டனில் வசித்தாலும் கூட, சட்டத்துக்கு புறம்பாக உருவான குழந்தை என்பதால் பல்வேறு சட்டச் சிக்கலை அந்த தம்பதியினர் சந்தித்து வருகின்றனர். இருப்பினும் தொடர் சட்ட போராட்டங்களை இந்த தம்பதியினர் எதிர்கொண்டு வருகின்றனர்.  பிரிட்டனில் தந்தை இறப்புக்கு பின் ஐ.வி.எஃப் முறையில் 5 குழந்தைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP