இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி

40ற்கும் மேற்பட்ட துறைகளில் இலங்கையர்களுக்கு இந்தியாவில் பயிற்சி
 | 

இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி


இந்தியாவில் இலங்கை அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புக்கள் 40க்கும் மேற்பட்ட துறைகளில் நடத்தப்பட உள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இந்திய தொழிற்நுட்ப மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு திட்டத்தின் (ITEC) கீழ் இந்த பயிற்சி வகுப்புக்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புக்கள் வரும் ஜனவரி 15ம் தேதியில் முதல் மார்ச் 31ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த வகுப்புக்களுக்கான முழு செலவையும் இந்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. அதில் விமான கட்டனங்கள், கல்விச்சுற்றுலா, தங்குமிட வசதிகள், போன்றவைகள் அடங்கும்.

 தலைமைத்துவத்தை வளர்த்தல், சர்வதேச வர்த்தகம், சர்வதேச மேலாண்மை, புதிய தொழில் தொடங்குதல், போன்றவற்றை ஊக்கிவிக்கும் நோக்கில் இந்த பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பத்துறை, ஆங்கில மொழிவளர்ச்சி, விவசாயம், கிராமவளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி ஆகிய துறைகளில் பயிற்சி வழங்கப்படுகின்றது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP