Logo

மத்திய வங்கி ஆளுநரிடம் சென்றது நிதி மோசடி விசாரணை அறிக்கை

நிதி மோசடி விசாரணை அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிப்பு
 | 

மத்திய வங்கி ஆளுநரிடம் சென்றது நிதி மோசடி விசாரணை அறிக்கை


இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015, 16ம் ஆண்டுகளில் இலங்கை மத்திய வங்கியில் நிதி மோசடி நடந்துள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழு, இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து தனது அறிக்கையை சமீபத்தில் மைத்திரிபால சிறிசேனாவிடம் வழங்கியிருந்தது. 

அந்த அறிக்கையில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மேலும் எதிர் காலத்தில் மத்திய வங்கியில் மோசடிகள் நடைபெறாது இருக்க சட்டங்கள் கொண்டு வர வேண்டும். பொய் சாட்சியம் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரிந்துரைகளும் அந்த அறிக்கையில் விடுக்கப்பட்டது. மத்திய வங்கி நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து இந்த அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரினால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரிடம் தற்போது வழங்கப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. ஏனையவை மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிபரின் ஆலோசனைகளின் அடிப்படையில் மத்திய வங்கியின் நிதிச் சபையினால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP