யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய தாய்லாந்தின் மூங்கில் வீடு!

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய தாய்லாந்தின் மூங்கில் வீடு!
 | 

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய தாய்லாந்தின் மூங்கில் வீடு!


இலங்கையின் யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்கரையில் தாய்லாந்து நாட்டு மூங்கில் வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளது. மக்கள் அதை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டின் கொடியுடன் மூங்கில் வீடு ஒன்று இலங்கை யாழ்ப்பாணம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. அந்த வீட்டை மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்தனர். அந்த சிறிய வீட்டின் நடுவே பாத்திரம் ஒன்று காணப்பட்டதுடன் அதனைச் சுற்றி அரிசி உள்ளிட்ட தானியப் பொருட்கள் இருந்தது. எனவே இறந்த தமது உறவினருக்கு இறுதிக்கடன் செலுத்துவதற்காக தாய்லாந்து மக்களால் அமைக்கப்பட்ட வீடாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. ஆனாலும் இந்த வீடு குறித்த விசாரணையை போலீஸார் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த காலங்களிலும் யாழ்ப்பாண மாவட்ட கடல் பகுதியில் மூங்கில் வீடுகள் கரையொதுங்கி உள்ளது. அதில் கடந்த 1990ம் ஆண்டு இறந்த உடல்களுடன் ஒரு மூங்கில் வீடு மிதந்து வந்தபோது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி, அதனை கரைக்கு இழுத்துவந்து உடல்களை தகனம் செய்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP