'படுகொலை சதி'- ரா மீதான குற்றச்சாட்டுக்கு இலங்கை திட்டவட்ட மறுப்பு 

''இந்திய உளவுத்துறையான 'ரா' தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக'' இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 | 

'படுகொலை சதி'- ரா மீதான குற்றச்சாட்டுக்கு இலங்கை திட்டவட்ட மறுப்பு 

''இந்திய உளவுத்துறையான 'ரா' தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக'' இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியதாக வெளியான செய்தி ஒன்றை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

இலங்கை தலைநகர் கொழும்பூவில் நடந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர் சிறிசேனா, தன்னைக் கொல்ல இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பு சதி செய்ததாகவும், ஆனால், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்றும், அமெரிக்க உளவுத் துறையின் செயல்பாடுகள் அந்நாட்டு அதிபருக்கு தெளிவாகத் தெரியாது என்பதுபோல தான் இதுவும் என அதிபர் சிறிசேனா கூறியதாக செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரத்தில் இந்தியா வர உள்ள நிலையில், தனியார் பத்திரிக்கை ஒன்றால் வெளியான இந்தச் செய்தி இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவை பாதிக்க செய்யும் வகையில் பேசப்பட்டது. 

'ரா' மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு 

இந்த நிலையில் இலங்கை அரசே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிபா் சிறிசேனா இதுபோன்று கூறவே இல்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்ட 'ரா' அமைப்பைச் சேர்ந்த நபா் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  இதை முன் வைத்து இரு நாட்டு உறவில் பிளவு ஏற்படுத்த சிலா் முயற்சிப்பதாக சிறிசேனா அந்தக் கூட்டத்தில் கூறியதாக இலங்கைத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP