இலங்கை: ஆனந்தன் பெயரில் நீச்சல் குளம்... அமைச்சர் அறிவிப்பு

நீச்சல் வீரர் ஆனந்தனின் பெயரில் வல்வட்டித்துறையில் நீச்சல் குளம்!
 | 

இலங்கை: ஆனந்தன் பெயரில் நீச்சல் குளம்... அமைச்சர் அறிவிப்பு


இலங்கையின் நீச்சல் வீரர் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தனின் பெயரில் வல்வட்டித்துறையில் நீச்சல் குளம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் என்ற நீச்சல் வீரர், 1975ம் ஆண்டு பாக் நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்தவர். மேலும் 7 உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

ஆனந்தனின் சாதனையை கவுரவிக்கும் வகையில், வல்வட்டித்துறையில் நீச்சல் குளம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த ஆண்டு விளையாட்டுத்துறையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். கல்முனை, பண்டாரவளையில் உள் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். 2018ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழா அக்டோபர் மாதம் ரத்தினபுரியில் நடைபெற உள்ளது” என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP