ஜெனிவா வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் - அதுல் கேசாப்

ஜெனிவா வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்-அதுல் கேசாப்
 | 

ஜெனிவா வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் - அதுல் கேசாப்


இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூததரக அதிகாரி அதுல் கேசாப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க தூதரக அதிகாரி அதுல் கேசாப்புக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் வடமாகாண மக்களின் பிரச்னைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க தூதரக அதிகாரியின் ட்விட்டரில், "வட மாகாண முதலமைச்சருக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறினேன். வட மாகாணத்தின் பிரச்னைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. நீடித்த தேசிய நல்லிணக்கத்துக்காகவும், அனைத்து மக்களின் வளமான எதிர்காலத்துக்காகவும், இலங்கை ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டியது அவசியம்" என பதிவிட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP