இலங்கை: மடு மாதா தேவாலயத்தை ஆக்கிரமிக்க ராணுவம் முயற்சி!

மடு மாதா தேவாலயத்தை ஆக்கிரமிக்க ராணுவம் முயற்சி!
 | 

இலங்கை: மடு மாதா தேவாலயத்தை ஆக்கிரமிக்க ராணுவம் முயற்சி!


400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தலமான மடு மாதா தேவாலயம் மற்றும் தேவாலயப் பகுதியை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் மடு மாதா தேவாலயம் அமைந்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கர்களின் புனித வழிபாட்டுத் தலமாக அது விளங்குகின்றது. இங்கு ஆண்டுதோரும் ஆகஸ்ட் மாதம்  நடைபெறும் திருவிழாவில்  இன, மத பேதமின்றி மக்கள் இங்கு கலந்து கொள்வர். 

ஈழப் போர் காலங்களில் இந்த தேவாலயத்தில் பெருமளவு தமிழ் மக்கள் அகதிகளாக அடைக்கலம் புகுந்தனர். இந்நிலையில் 2008, 2009ம் ஆண்டுகளில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஆலயமும் பெரும் சேதத்தை சந்தித்தது. இதையடுத்து மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்த போது, மேரி அன்னையின் திருவுருவச் சிலையும் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.


தற்போது மடு ஆலயத்துக்கு செல்வதற்கான சாலை முகப்பின் இரு பக்கங்களிலும் இரு அரச மரங்கள் வளர்ந்து வருகின்றது. அதில் புத்த பெருமானின் சிலையை வைக்க ராணுவத்தினர் முயற்சித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையில் எங்கெல்லாம் அரச மரங்கள் வளர்ந்துள்ளதோ அங்கெல்லாம் அரசு ராணுவத்தைக்கொண்டு புத்தர் சிலைகளை வைத்து வருகின்றது என தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் குற்றம்சுமத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மடு மாதா தேவாலயம் அமைந்துள்ள பகுதியை ராணுவம் கைப்பற்ற நினைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP