ரூ.1620 கோடி போதைப் பொருட்கள் அழிப்பு!

கொழும்பில் 1620 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் அழிப்பு
 | 

ரூ.1620 கோடி போதைப் பொருட்கள் அழிப்பு!


இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட, போலீசாரால் கைப்பற்றப்பட்ட 928 கிலோ போதை பொருட்கள் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப இன்று அழிக்கப்பட்டன.

இலங்கையில் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான வெளிநாட்டினர் உள்ளிட்டோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருள்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் படி அழிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கொழும்பு தலைமை நீதிபதி முன்னிலையில் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை பகுதியில் 928 கிலோ போதைப் பொருள் நீரில் கரைத்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1620 கோடி. கடந்த ஆண்டு இதே போன்று வடமாகாணத்தில் பெருமளவு போதைப்பொருள் நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் தீயிட்டு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP