முடிந்தால் நிரூபியுங்கள்- மகிந்த சவால்!

முடிந்தால் நிரூபியுங்கள்- மகிந்த சவால்!
 | 

முடிந்தால் நிரூபியுங்கள்- மகிந்த சவால்!


தன் மீது அரசு சுமத்தும் எந்த ஒரு குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி நிதி மோசடி பற்றி எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இதை எதிர்கொள்ள முடியாமல் ஆளும் சிறிசேனா அரசு தடுமாறி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடு பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், சில ஊழல் விவகாரங்களை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை மகிந்தாவுக்கு எதிராக பயன்படுத்த சிறிசேனா அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தே, மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து முதலில் விசாரணை செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்சே, "அரசின் எந்தவொரு விசாரணைக்கும் நான் தயார். முடிந்தால் என் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து ஆதாரங்களை வெளியிட்டு நிரூபிக்கட்டும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP