Logo

பிரபாகரனும் பொட்டுவும் சேர்ந்தே ராஜீவ் காந்தியைக் கொன்றனர்- கருணா அம்மான்

கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது தற்கொலை குண்தாரி நடத்திய தாக்குதலில் இந்தியாவின் முன்னாள் பிராதம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
 | 

பிரபாகரனும் பொட்டுவும் சேர்ந்தே ராஜீவ் காந்தியைக் கொன்றனர்- கருணா அம்மான்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சேர்ந்தே, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தனர் என கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்தி முரளிதரன், ராஜீவ் காந்தி கொலை குறித்து பிரபாகரன் தன்னுடன் கலந்தாலோசிக்கவில்லை. அவரும் பொட்டு அம்மானும் சேர்ந்தே ராஜீவ் காந்தியைக் கொன்றனர் என்று கூறியுள்ளார்.

இது குறித்து கருணா மேலும் கூறுகையில், "ராஜீவ் காந்தியை படுகொலை செய்தமையே, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, ஒரு பயங்கரவாத இயக்கமாக இந்தியா அறிவித்தது. போர் நிறுத்தப்பட்ட பின்னரே தமிழ் இளைஞர்கள் தற்போது உயிருடன் இருக்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் விடுதலைப் போராளிகளாகவே இணைந்தோம். பின்னர் நாம் பயங்கரவாதிகளாக மாறிவிட்டோம். ஏனெனில், இங்குவந்த இந்தியப்படையை அடித்து விரட்டினோம். அதன் பின்னர் தலைவர் பிரபாகரனும் பொட்டு அம்மானும் சேர்ந்து எம்மிடமும் கேட்காமல் இந்தியத் தலைவரை கொலை செய்து விட்டார்கள்" என்றார்.

கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது தற்கொலை குண்தாரி நடத்திய தாக்குதலில் இந்தியாவின் முன்னாள் பிராதம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP