Logo

இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமில்லை - ஞானதேரர்

இலங்கையில் நல்லிணக்கத்துக்கு சாத்தியமில்லை - ஞானதேரர்
 | 

இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமில்லை - ஞானதேரர்


யாழ்ப்பாணத்தில் ஒரு பௌத்த குருவின் உடலை தகனம் செய்ய முடியாத சூழலில், எவ்வாறு நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும் என கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்வி எழுப்­பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 19ம்தேதி பௌத்த குரு மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேரர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலை முனியப்பர் ஆலயம் மற்றும் தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடம் அமைந்துள்ள பகுதியிலும் தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இது தமிழர்களின் உணர்வுகளை புண்டுத்துவதோடு பண்பாட்டையும் சீரழிக்கும் நடவடிக்கை எனக்கூறி தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் பௌத்த குருவின் உடலை, முனியப்பர் ஆலயம், தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவிடம் அமைந்துள்ள பகுதியிலேயே தகனம் செய்ய வேண்டும் என யாழ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த பகுதியிலேயே பௌத்த குருவின் உடலை தகனம் செய்ய அனுமதி அளித்தது. இதையடுத்து ராணுவப் பாதுகாப்புடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்த, வரும் ஜனவரி 8ம் தேதி முதல் 7 நாட்களுக்கு தேசிய நல்லிணக்க வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

யாழ். நாக­ பௌத்த ஆலையத்தின் முன்னாள் பௌத்த குரு மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேரர் மரணம் அடைந்ததையடுத்து அவ­ரது உ­டலை தகனம் செய்வதற்கு யாழ்ப்­பா­ணத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்­ப­டி­யாயின் இவர்­களின் நல்­லி­ணக்கம் இதுவா?. இவ்­வாறு செயற்­பட்டு எப்­படி நல்லிணக்கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும். 

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தலை­மயிலும் மனோ கணேசன் தலை­மை­யிலும் நல்­லி­ணக்கம் வேலைத்­திட்­டங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் யாழில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் நடக்கும் போது இப்­படி நல்­லி­ணக்­கம் ஏற்படும்.

தற்­போது சிறுபான்மை மக்­கள் தமது ஆதிக்­கத்தை வளர்த்து வரு­கின்­றனர். நாட்டின் முக்கியமான அமைச்சர்கள் பலர் இஸ்லாமியர்களாக உள்ளனர். இவர்களின் செயல் திறனை பார்த்து சிங்­கள தலை­வர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்­துடன் தற்­போது சிறு­பான்மை மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கும் பிரச்சினைகள் குறித்து அனைத்துக் கட்சி மாநாட்டை நடத்தி அனைத்து கட்சிகளின் ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பெற வேண்டும் என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP