Logo

தேர்தல் காலத்தில் ஜாமின் வழங்க முடியாது - நீதிபதி

தேர்தல் காலத்தில் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஜாமின் வழங்க முடியாது- நீதிபதி இளஞ்செழியன்
 | 

தேர்தல் காலத்தில் ஜாமின் வழங்க முடியாது - நீதிபதி


யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடைபெறும் போது கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோத குற்றங்களுக்கு ஜாமின் வழங்க முடியாதென யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

இலங்கையில் வரும் மாதம் உள்ளூராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. யாழ்ப்பாணத்தில் தேர்தல் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அங்கு தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகின்றது. சில கட்சிகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,54 கிலோ கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, "யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தேர்தல் வன்முறையோடு தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படும் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தேர்தல் முடியும் வரை ஜாமின் வழங்க முடியாது.

மேலும் தேர்தல் ஆணைக்குழு ஜனநாயக ரீதியான தேர்தலை நடத்தும் வகையில் செயற்பட்டு வருகின்து. அதற்கு ஒத்துழைக்கும் வழங்கி தேர்தலை நடத்த உதவ வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தேர்தல் முடிவடையும் வரை குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமின் வழங்க முடியாது" என நீதிபதி மா. இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP