Logo

இலங்கை அதிபரை சந்தித்தார் மோடி!

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள நேபால் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 | 

இலங்கை அதிபரை சந்தித்தார் மோடி!

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள நேபால் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

வங்கக்கடலை பகிர்ந்து கொள்ளும்  இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபால், மியான்மர், தாய்லாந்து மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இணைந்து தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அளவில் வைத்துள்ள கூட்டணி, பிம்ஸ்டெக் என அழைக்கப்படுகிறது. இந்த கூட்டணியின் 4வது உச்சி மாநாடு, நேபால் தலைநகர் காத்மாண்டுவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள, 7 நாடுகளின் தலைவர்களும் காத்மாண்டுவிற்கு சென்றுள்ளனர். அங்கு, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இரு நாட்டு உறவுகள் குறித்து, இரண்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

"இரு நாடுகளின் உறவை வலிமைப்படுத்துவது குறித்தும், வளர்ச்சி குறித்தும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்தது" என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP