வடக்கில் ராணுவம் இருப்பது தமிழ் மக்களுக்கு ஆபத்தானது -வீ. ஆனந்த சங்கரி

வடக்கில் ராணுவம் இருப்பது தமிழ் மக்களுக்கு ஆபத்தானது -வீ. ஆனந்த சங்கரி
 | 

வடக்கில் ராணுவம் இருப்பது தமிழ் மக்களுக்கு ஆபத்தானது -வீ. ஆனந்த சங்கரி

தமிழர்களின் நிலங்களில் ராணுவத்தினர் நிலை கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு ஆபத்தானது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். 

வடக்கில் 5 பேருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற கணக்கில் நிலைகொண்டுள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் வடக்கில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலத்தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் ராணுவத்தினரின் இருப்பை அதிகப்படுத்தும் செயல்பாட்டிலேயே அரசு ஈடுபட்டு வருகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வீ. ஆனந்த சங்கரி, “ராணுவத்தினருக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. அவர்களின் தேவைகளுக்கு நிலங்கள் தேவையற்றது. முகாம்கள் மட்டும் போதும். சொந்த மக்களின் நிலங்களை அவர்களிடம் கொடுக்காமல் இருப்பது கொடுமையானது. எல்லாக் கொடுமைகளிலும் அநியாயமானது மக்களின் இந்தத் துயரத்தை எமது தமிழ்த் தலைமைகள் பார்த்துக் கொண்டிருப்பது. எனவே அரசாங்கம் மக்களின் நிலங்களை விடுவிப்பதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களின் நிலங்களில் தொடர்ந்தும் ராணுவத்தினர் நிலை கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு ஆபத்தானது” என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP