Logo

ரணில் பதவி பறிப்பை எதிர்த்து இலங்கையில் மாபெரும் போராட்டம் 

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கேவிடமிருந்து பிரதமர் பதவியை பறித்து வெளியேற்றி ராஜபக்சேவை பிரதமராக நியமித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

ரணில் பதவி பறிப்பை எதிர்த்து இலங்கையில் மாபெரும் போராட்டம் 

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கேவிடமிருந்து பிரதமர் பதவியை பறித்து வெளியேற்றியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இலங்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தலைவர் மைத்ரிபால சிறிசேனா அதிபராக உள்ளார். இவருடன், கூட்டணியில் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவி வகித்தார்.  கண்டி கலவரம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.  இதனிடையே திடீரென இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த 26ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவைப் புதிய பிரதமராக நியமித்தார். தானே பிரதமர் எனக் கூறி ரணில் விக்ரமசிங்கே அலுவலகத்தைவிட்டு வெளியேற மறுத்து வரும் நிலையில், சிறிசேனா நாடாளுமன்றத்தையும் முடக்கி வைத்தார். ஆனால் இதற்கு சபாநாயகர் ஜெயசூர்யா முட்டுக்கட்டைப் போட்டார்.  ஆனால் இவை அனைத்தையும் மீறி ராஜபக்சே தனது பிரதமர் அலுவலக பொறுப்பை மேற்கொண்டார். 

இந்த நிலையில், இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவை வெளியேற்றியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரது தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் அந்நாட்டு தலைநகர் கொழும்பில், போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவரது கட்சி தொண்டர்கள் திரளாக இதில் பங்கேற்றனர். கொழும்புவில் உள்ள பிரதமர் அலுவலகம் முதல் முக்கிய சாலைகளின் வழியாக நடைபெற்ற இந்தக் கண்டன பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ரணில் விக்ரமசிங்கே, ''அதிபர் சிறிசேனா அளித்த வாக்குறுதியை  தவற விட்டார். நிர்வாக அதிகாரத்தை தனது கையில் எடுத்துகே கொண்டு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை துச்சமாக ஒதுக்கி தள்ளியுள்ளார்'' எனக் கூறினார். 

ராஜபக்ச்சே அவையில் புதிய அமைச்சர்கள்...

ராஜபக்சேவுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இதனிடையே  ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த, ராஜபக்சேவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து அதிபர் ஸ்ரீ சேனா முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இதேபோல்  அமைச்சரவை அந்தஸ்துள்ள 12 அமைச்சகங்களுக்கான புதிய செயலாளர்கள், அதிபர் செயலகத்தில் நேற்று பதவி எற்றுக்கொண்டனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP