தமிழீழத்துக்கு இலங்கையை தாரைவார்த்து விடுவார்கள் - மகிந்த எச்சரிக்கை!

இலங்கை, தமிழீழத்துக்கு தாரைவாக்கப்படும்- மகிந்த எச்சரிக்கை!
 | 

தமிழீழத்துக்கு இலங்கையை தாரைவார்த்து விடுவார்கள் - மகிந்த எச்சரிக்கை!


2ம் முறையும் மக்கள் ஏமாற்றம் அடைந்தால், நாடு தமிழீழத்துக்கு தாரைவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்சே எச்சரித்துள்ளார்.

இலங்கையில் வரும் மாதம் மாகாண சபைகளுக்கான உள்ளுராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளது. இதில் கண்டியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த, “மக்கள் ஒரு முறை ஏமாற்றம் அடைந்தாலும் 2ம் முறை ஏமாற மாட்டார்கள். அவ்வாறு ஏமாற்றப்பட்டால் நாடு தமிழீழத்துக்கு தாரைவாக்கப்பட்டிருக்கும். தற்போது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பனிப்போர் நடைபெறுகின்றது.

மேலும் எனது ஆட்சியில் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயல்படவில்லை. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP