யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்- வகுப்புக்களுக்கு தடை

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்- வகுப்புக்களுக்கு தடை
 | 

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்- வகுப்புக்களுக்கு தடை


இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற வாக்குவாதம் பின்னர் மோதலில் முடிந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 3ம், 4ம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே நேற்று மாலை இடம்பெற்ற மோதலில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதைத் தொடர்ந்து 3ம் மற்றும் 4ம் ஆண்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் வர இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில்  பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் ராமநாதன் நுண்கலைதுறைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைத்துறை பேராசிரியர் சுதாகர் தெரிவித்துள்ளார். மேலும் 1ம் 2ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் சுதாகர் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP