Logo

இலங்கையில் இன்ஃப்ளுவென்சா -ஏ வைரஸ் தாக்கம் - 13 பேர் பலி; 3000 பேர் பாதிப்பு?

இலங்கையின் தெற்கு மாகாணத்தில் பலவற்றில் இன்ஃப்ளுவென்சா -ஏ வைரஸ் நோய் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 13 குழந்தைகள் பலியான நிலையில், சுமார் 3000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.
 | 

இலங்கையில் இன்ஃப்ளுவென்சா -ஏ வைரஸ் தாக்கம் - 13 பேர் பலி; 3000 பேர் பாதிப்பு?

இலங்கையின் தென் மாகாணத்தில் பலவற்றில் இன்ஃப்ளுவென்சா -ஏ வைரஸ் நோய் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுவரை 13 குழந்தைகள் பலியான நிலையில், சுமார் 3000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.

இலங்கையில் கடந்த சில வாரங்களாக வைரஸ் நோய் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பரிசோதனைகளைத் தொடர்ந்து அது இன்ஃப்ளுவென்சா -ஏ வகை வைரஸ் என கண்டுபிடிக்கப்பட்டது. 

இது குறித்து அங்கிருக்கும் மருத்துவ நிபுணர் குழு அளித்துள்ள விளக்கத்தில், ''வைரசின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது. இந்த வைரசினால் பாதிக்கப்பட்ட 22 நோயாளர்கள் மட்டுமே கம்புறுபிட்டிய மருத்துவமனைக்கு புதிதாக வந்துள்ளனர். ஜூன் முதலாம் தேதி முதல் மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 10ஐ விட குறைந்துள்ளது. இன்ஃப்ளுவென்சா -ஏ வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், வைரசைக் கட்டுப்படுத்தவும் 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.'' என்று கூறினார்.

ஆனால் இலங்கை தென் மாகாணத்தில் அதிக பாதிப்பு இருப்பதாகவும் அதன் உண்மை நிலை மறைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தெற்கில் இன்ஃப்ளுவென்சா -ஏ வைரஸ் பிரச்சினையை அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிக்கிறதே தவிர உரிய தீர்வைக் கண்டு அதனைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே குற்றம்சாட்டியுள்ளார். அங்கு 3000 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகவும் 13 குழந்தைகள் இறந்த நிலையில், நோய் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. வைரஸின் வகையே தற்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உண்மை நிலை மறைக்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP