Logo

வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!

வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!
 | 

வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!


வடக்கில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன் பாட்டை கட்டுப்படுத்த வட மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலங்கையில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. சமீபத்தில் 30 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் வடபகுதி கடலில் மிதந்து வந்த நிலையில், கடற்படையினர் மீட்டு இருந்தனர். மேலும் பலர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், வடமாகாணசபையில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின், "யாழ் மாவட்டத்தில் போதை பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.

மேலும் பாடசாலைகளை இலக்கு வைத்து பரப்பப்படும் போதை பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடமாகாண சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP