நாடு திரும்பினர் தமிழக மீனவர்கள்!

நாடு திரும்பினர் தமிழக மீனவர்கள்!
 | 

நாடு திரும்பினர் தமிழக மீனவர்கள்!


எல்லை கடந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த  69 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கை சிறைகளில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு, நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதைத் தொடர்ந்து 20 மீனவர்கள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர்.


மேலும் ஊர்காவல்துறை, பருத்தித்துறை மற்றும் தலைமன்னார் நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைய, 69 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.


அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதன்பின், காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து கடற்படையின் கண்காணிப்புக் கப்பலில் சர்வதேச கடல் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு, இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அங்கிருந்து அவர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘அமாயா’ (AMAYA) என்ற கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP