தமிழர்களை கடத்திய தசநாயக்காவுக்கு ஜாமீன்

கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமான்டர் டீ.கே.பி தஸநாயக்க மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 5 பேருக்கு ஜாமின்
 | 

தமிழர்களை கடத்திய தசநாயக்காவுக்கு ஜாமீன்


11 தமிழ் இளைஞர்களை வெள்ளை வேனில் கடத்தி வழக்கில், கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமான்டர் டீ.கே.பி.தஸநாயக்க மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 5 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சே ஆட்சி நடத்திய 2008-09ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இதுவரை காணாமல் போனவர்களாகவே அவர்கள் கருதப்படுகின்றனர்.

11 தமிழ் இளைஞர்களில் சிலரது உடல் எச்சங்கள் என சந்தேகிக்கப்படுகின்ற சில எலும்புக்கூடுகள் திருகோணமலை பகுதியில் உள்ள கடற்படையின் ரகசிய சித்திரவதை முகாமில் இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமான்டர் டீ.கே.பி,தஸநாயக்க மற்றும் கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து வந்த கடற்படை அதிகாரிகள், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்து வந்தது. இதை எதிர்த்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது. தலா ஒரு லட்சம் ரூபாய் மற்றும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கான்பித்து ஜாமீனில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், நாட்டைவிட்டு வெளியேற தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP