Logo

ஊழல் வழக்கு- முன்னாள் தலைமை நீதிபதி ஆஜராக உத்தரவு

ஊழல் வழக்கு- முன்னாள் தலைமை நீதிபதியை ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
 | 

ஊழல் வழக்கு- முன்னாள் தலைமை நீதிபதி ஆஜராக உத்தரவு


இலங்கையின் முன்னாள்  தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரை வரும் மார்ச் மாதம் 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு தனியார் மின்சார உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு  நிலம் ஒன்றை  வாங்கும்  போது ஊழல்  நடைபெற்றுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டு குறித்து  விசாரணை  நடத்த விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கையில், நிலம் வாங்கும் போது நடைபெற்ற  ஊழலில் முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ், தற்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.பீ. நவாஸ் மின்சாரத் துறை அமைச்சகத்தின்  முன்னாள் செயலாளர் எம்.பி. பெர்டிணந்து ஆகிய மூவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும்  இலங்கையில் உள்ள தனியார் மின்சார உற்பத்தி  நிறுவனத்துக்கு நிலம் கொள்வனவு செய்த போது நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு, எதிராக  நடவடிக்கை எடுக்காது தவறிழைத்துள்ளதாக  மொஹான் பீரிஸ் மற்றும் ஏ.எச்.எம்.பீ. நவாஸ் அகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் சட்டத்தின் கீழ்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மூவரையும் வரும் மார்ச் மாதம் 8ம் தேதி பொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP