இலங்கை படைகளின் அட்டூழியத்தை பற்றிய புத்தகம் சென்னை கண்காட்சியில் வெளியீடு

சென்னை புத்தக கண்காட்சி: இலங்கை படைகளின் அட்டூழியத்தை பற்றிய புத்தகம் வெளியீடு
 | 

இலங்கை படைகளின் அட்டூழியத்தை பற்றிய புத்தகம் சென்னை கண்காட்சியில் வெளியீடு


சென்னை புத்தக கண்காட்சியில், புது உலகம் புத்தக அரங்கில் இன்று பிரயன் செனவிரத்தின (Brian Senwiratne) எழுதிய "இலங்கைத் தமிழா்களுக்கு எதிரான ஆயுதப்படைகளின் பாலியல் வன்கொடுமை" என்ற நூல் வெளியிடப்பட்டது.

இலங்கையில் பல ஆண்டுகளாக தமிழ் பெண்கள் மீது இலங்கை அரச படைகளினால் திட்டமிடப்பட்டு பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். இலங்கையின் இறுதிப்போரின் போதும் அரச படைகளினால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை சா்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.

இந்நிலையில் தமிழின அழிப்புக்கு எதிராக தனது 16வது வயது முதல் குரல் கொடுத்து வரும் பிரயன் செனவிரத்தின எழுதிய  "இலங்கைத் தமிழா்களுக்கு எதிரான அரச படைகளின் பாலியல் வன்கொடுமை" என்ற நூலை இன்று சென்னை போதிவனம் என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நூலை, பேராசிரியா் ராமு மணிவண்ணன் வெளியிட, ஊடகவியலாளா் அருணா பெற்றுக்கொண்டாா்.  இந்நூல் இந்தியாவின் முதல் பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியா் தனது நூலில், "இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது  மனித உரிமை மீறல் நடைபெறுவதை இதுவரையில் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே அங்கு தமிழா்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் இந்த நூலை எழுதியுள்ளேன்" என குறிப்பட்டுள்ளாா். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP