மத்திய வங்கியில் மோசடி செய்யப்பட்ட 92 கோடி ரூபாயும் மீட்கப்படும்- ரணில் அறிவிப்பு

மத்திய வங்கி நிதி மோசடி- பிரதமர் ரணில் விஷேச அறிக்கை
 | 

மத்திய வங்கியில் மோசடி செய்யப்பட்ட 92 கோடி ரூபாயும் மீட்கப்படும்- ரணில் அறிவிப்பு


இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற நிதி மோசடி குறித்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங் கூறியுள்ளார். 

இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற நிதி மோசடி குறித்த விசாரணை அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுகொடுத்த பின்னரே ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். மத்திய வங்கி நிதி மோசடி விவகாரம் இலங்கை அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, "நாங்கள் அதிகாரத்திற்கு வந்தது ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கே. கட்சி பேதமின்றி ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கே என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிதிமோசடி குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி ஜனாதிபதி ஆணைக்கழுவை நியமித்ததுடன், அந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம். ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சாட்சியமும் அளிக்கப்பட்டது

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலும் இதுபோன்ற குற்றச்சட்டுக்கள் எழுந்தன. எனினும் அவை குறித்து எந்த விசாரணையும் செய்யப்படவில்லை. மத்திய வங்கி நிதி மோசடியால் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் சட்டவிரோதமாக 92கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளது. இந்த நிதியை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

அதேபோன்று இந்த மோசடியில் எந்த அதிகாரிகள் சம்மந்தப் பட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். ஆளும் கட்சி உறுப்பினர்கள் நிதி மோசடிகளில் ஈடபட்டு இருந்தாலும் தண்டிக்கப்படுவர். நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் நடைபெற்றாலும் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP