Logo

6 ஆண்டுகள் பதவியிலா? நீதிமன்றம் சென்றார் இலங்கை ஜனாதிபதி

6 ஆண்டுகள் பதவியிலா? நீதிமன்றம் சென்றார் இலங்கை ஜனாதிபதி
 | 

6 ஆண்டுகள் பதவியிலா? நீதிமன்றம் சென்றார் இலங்கை ஜனாதிபதி


6 ஆண்டுகள் ஜனாதிபதி பதவியில் தன்னால் நீடிக்க முடியுமா என்று மைத்திரிபால சிறிசேனா உயர்நீதிமன்றத்திடம் கருத்து கேட்டுள்ளார்.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனா பதவியேற்றதன் பின்னர், 19வது திருத்தச் சட்டம், நடைமுறைக்கு வந்தது. இதன்படி, ஆறு ஆண்டுகள் என்று இருந்த ஜனாதிபதியின் பதவிக் காலம், 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, மைத்திரிபால சிறிசேனா, தன்னுடைய பதவிக் காலம் தற்போதுள்ள சட்ட திருத்தத்திற்கு உட்பட்டதா அல்லது முன்னர் நடைமுறையில் இருந்த அரசியலமைப்புக்கு உட்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

19வது திருத்தச் சட்டத்திருத்தத்தின் படி, 2020ம் ஆண்டுடன் ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP