இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டில் 48 பேர் கைது

இந்த ஆண்டு, லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து 2470 புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. அவற்றில் 1462 புகார்கள் விசாரணைக்குத் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
 | 

இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டில் 48 பேர் கைது


கடந்த 11 மாதங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்களில் இலங்கையில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் அதிகரித்துள்ளன. கடந்த கால அரசாங்கங்கள் செய்த ஊழல் குறித்த குற்றச்சாட்டுக்களும் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டு முக்கியமானது. இந்த குற்றசாட்டில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் இருந்த ரவி கருணாநாயக்க கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில், இந்த ஆண்டில் மட்டும் ஊழல் குற்றச்சாட்டில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலில்,

"இந்த ஆண்டு, லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து 2470 புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. அவற்றில் 1462 புகார்கள் விசாரணைக்குத் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 649 முறைப்பாடுகள் லஞ்சம் தொடர்பான சட்டத்திற்கு உட்பட்டவை அல்ல, எனவே அது நீக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனவரி முதல் நவம்பர் 30ம் தேதி வரையான காலப் பகுதியில் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த 70 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் போக்குவரத்துத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர்கள் விமான நிறுவன முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராகவும் வழக்குகள் நடைபெற்றுள்ளது.

அரச ஊடக நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு எதிராகவும், மாவட்ட நீதிபதி ஒருவருக்கு எதிராகவும், மேலும் சில அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன" என கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP