இலங்கை தேர்தல்: மாபெரும் வெற்றியை நோக்கி ராஜபக்ச

இலங்கை தேர்தல்: மாபெரும் வெற்றியை நோக்கி ராஜபக்ச
 | 

இலங்கை தேர்தல்: மாபெரும் வெற்றியை நோக்கி ராஜபக்ச


இலங்கையில் நேற்று நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சவின் கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

340 உள்ளாட்சி மன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், சுமார் 1.5 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே, ராஜபக்சவின் இலங்கை மக்கள் கட்சி, மாபெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வரை, அக்கட்சியின் வேட்பாளர்கள் 1551 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் 1106 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைத்திரிபால சிறிசேனவின் இலங்கை விடுதலை கட்சி, வெறும் 504 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 65% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

2015ம் ஆண்டு சிறிசேனவிடம் தோல்வியடைந்த பிறகு அரசியலில் இருந்து ராஜபக்ச ஒதுங்கி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP