ரொஹிங்கியாக்கள் கொலை; ஒப்புக்கொண்டது மியான்மர் ராணுவம்

ரொஹிங்கியாக்கள் கொலை; ஒப்புக்கொண்டது மியான்மர் ராணுவம்
 | 

ரொஹிங்கியாக்கள் கொலை; ஒப்புக்கொண்டது மியான்மர் ராணுவம்


மியான்மர் நாட்டின் ராணுவம், அந்நாட்டில் வசித்து வரும் ரொஹிங்கியா இஸ்லாமிய இனத்தவர்களை அழிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இதனால், சமீப காலத்தில் லட்சக்கணக்கான ரொஹிங்கியா மக்கள், வங்கதேசம், இந்தியா போன்ற அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரொஹிங்கியா தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதாக கூறி, பல ரொஹிங்கியா கிராமங்களுக்கு பாதுகாப்பு படையினரும், இன வெறியர்களும் தீ வைத்து, அங்கிருக்கும் மக்களை விரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதை மியான்மர் அரசும் அந்நாட்டு ராணுவமும் இதுவரை முற்றிலும் மறுத்து வந்தது.

சமீபத்தில், தலைநகருக்கு அருகே உள்ள கிராமத்தில் 10 உடல்கள் ஒன்றாக புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல்கள் ரொஹிங்கியா மக்களின் உடல்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின், அவர்களை கொலை செய்தது யார் என்பது குறித்து முழு விசாரணை நடத்த மியான்மர் ராணுவம் உத்தரவிட்டது.

இந்த விசாரணையில் தற்போது, ராணுவத்தினரும், அருகே  உள்ள கிராம மக்களும் சேர்ந்தே இந்த கொலைகளை செய்ததாக தெரிய வந்துள்ளது. 200 ரொஹிங்கியா தீவிரவாதிகள், கத்தி, வாள் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி முயற்சித்ததாகவும், அவர்களில் 10 பேரை ராணுவம் கைது செய்ததாகவும் தெரிகிறது. இதன்பின்னர், அவர்களை தலைமையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், பாதுகாப்பு படையினரும், சில கிராம மக்களும் சேர்ந்து, அவர்களை கொலை செய்ய முடிவெடுத்தனர். தங்கள் கிராமங்களை ரொஹிங்கியா தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திய கோபத்தில் அவர்கள் இவ்வாறு செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP