இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள திமோர் தீவில் இன்று 6.2 என்ற ரிக்டர் அளவில் சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டவில்லை.
 | 

இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள திமோர் தீவில் இன்று 6.2 என்ற ரிக்டர் அளவில் சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டவில்லை. 

இந்தோனேசியாவின் திமோர் தீவில் குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குள் 8 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.2 அலகுகளாக பதிவானது.

சேத விபரங்கள் தொடர்பாக உடனடி தகவலும் வெளியாகவில்லை.  

சமீபத்தில் இங்குள்ள லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 555 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கத்தில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதில் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால், மக்கள் வீடுகளை இழந்து சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 என்ற அளவிலான கடும் நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி ஏற்பட்டது.  இதனால் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகினர். இதில் இந்தோனேசியா மிகப் பெரிய பேரழிவை சந்தித்தது.  இந்தோனேசியா பூமியில் நெருப்புவளையம் எனப்படும் பகுதியில் உள்ளது. அதாவது பசிபிக் பகுதியில் 450 எரிமலைகளை கொண்ட பகுதி தான் இது. உலகின் பயங்கர எரிமலைகளில் அபாயகரமானவை இங்கு தான் அதிகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP