மாயமான விமானத்தை இனி தேட முடியாது... கை கழுவிய மலேசிய அரசு!

கடந்த 2014ம் ஆண்டு காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்றோடு முடிவடைந்தது.
 | 

மாயமான விமானத்தை இனி தேட முடியாது... கை கழுவிய மலேசிய அரசு!

மாயமான விமானத்தை இனி தேட முடியாது... கை கழுவிய மலேசிய அரசு!

கடந்த 2014ம் ஆண்டு காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்றோடு முடிவடைந்தது. 

2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. கோலாலம்பூரில் இருந்து கிளம்பி 40 நிமிடங்களில், விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, பாதையில் இருந்து விமானம் திரும்பியதாக, பின்னர் நடந்த விசாரணையில் தெரிய வந்தது. 

விமானத்தை கண்டுபிடிக்க, பல நாடுகள் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டைகள் தோல்வியிலேயே முடிந்தன. இதுவரை பல இடங்களில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 3 பாகங்கள் மட்டுமே விமானத்தை சேர்ந்தவையாக கருதப்படுகிறது.  ஆனால், எதுவுமே உறுதி செய்யப்படவில்லை. 

இரண்டாம் கட்ட தேடுதல் பணிகளை அமெரிக்காவை சேர்ந்த 'ஓஷன் இன்ஃபினிட்டி' என்ற நிறுவனம் நடத்தி வந்தது. ஆஸ்திரேலியா, மலேசியா, சீன அரசுகள் சுமார் ரூ.1000 கோடி செலவில் நடத்திய முதல் கட்ட தேடுதல் வேட்டையை இந்த நிறுவனம் தொடர்ந்தது. விமானத்தை கண்டுபிடித்தால், சுமார் ரூ.500 கோடி சன்மானம் கொடுக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஓஷன் இன்ஃபினிட்டி கடந்த வருடம் முதல் நடத்தி வந்தது. 

ஆனால், அந்த நிறுவனம் இதுவரை விமானத்தை கண்டுபிடிக்கவில்லை. இன்றுடன் அந்நிறுவனத்துக்கு கொடுத்த கெடு முடிவடையும் நிலையில், அதை மீண்டும் துவங்கும் திட்டம் இல்லையென மலேசிய அரசு தெரிவித்துள்ளது. விமானத்தில் மாயமான பயணிகளின் உறவினர்கள் தேடுதல் நிறுத்தப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP