இந்தோனேஷியா வெள்ளம்; பலி எண்ணிக்கை 107ஆக உயர்வு

இந்தோனேஷியாவின் பப்புவா தீவில் கடந்த வாரம் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாயமான 93 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
 | 

இந்தோனேஷியா வெள்ளம்; பலி எண்ணிக்கை 107ஆக உயர்வு

இந்தோனேஷியாவின் பப்புவா தீவில் கடந்த வாரம் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாயமான 93 பேரை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தோனேஷியாவை சேர்ந்த பப்புவா மாகாணத்தில், கடந்த வாரம் கடும் மழை பெய்தது. தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பப்புவாவில் உள்ள ஜெயபுரா என்ற பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதில் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளதாக இந்தோனேஷிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. மாயமானவர்களில் 93 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். ஜெயபுராவில் நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில், மீட்புப் பணிகளை மையப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  84 பேர் படுகாயமடைந்ததாவும், 73 பேர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகளை இழந்த சுமார் 10,000 பேர், பல்வேறு அரசு கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP