Logo

அறுவை சிகிச்சையை எதிர்கொள்ளும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள்

ஒட்டி பிறந்த பூட்டானின் முதல் இரட்டையர்களான நிமா மற்றும் தவா பெல்டன் ஆகியோருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பிரித்திட ஆஸ்திரேலியா அழைத்து செல்லப்பட்டுள்ளனர். விரைவில் குழந்தைகளுக்கு சிகிச்சை நடக்க உள்ளது.
 | 

அறுவை சிகிச்சையை எதிர்கொள்ளும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள்

ஒட்டி பிறந்த பூட்டான் நாட்டின் முதல் இரட்டையர்களான நிமா மற்றும் தவா பெல்டன் ஆகியோருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவர்களைத் தனித்தனியேப் பிரித்திட ஆஸ்திரேலியா அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பலகட்ட பரிசோதனைகளுக்கு பின் குழந்தைகளை பிரிக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.  

பூட்டானில் ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் கடந்த 2017, ஜூலை 13ஆம் தேதி பிறந்தனர். பூட்டானில் இந்த வகையில் பிறந்த முதல் இரட்டையர்கள் இவர்கள்  என்பது கூடுதல் செய்தியாக உள்ளது. நிமா மற்றும் தவா என்று பெயரிடப்பட்ட இந்தக் குழந்தைகள், இருவரின் உடலும் மார்புப் பகுதியோடு ஒட்டியுள்ளதால், அவற்றை பிரிக்க அறுவை சிகிச்சைக்காக பல தரப்பட்ட ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தது. 

அதாவது இரு குழந்தைகளுக்கும் ஒரு கல்லீரல் மட்டுமே உள்ளது.  14 மாதக் குழந்தைகளாக இருக்கும் இருவருக்கும் தற்போது ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட ஆரம்பித்துவிட்டது. இந்தக் குழந்தைகளால் மற்றவர்கள் போல நடக்கவும் உட்காரவும் கூட முடியாது. இதனால் குழந்தைகள் தினம் தினம் வேதனையை அனுபவித்து வருகின்றனர். இறுதியாக இதனைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய மருத்துவமனை ஒன்று இவர்களுக்கு அறுவை சிக்கிச்சை மேற்கொள்ள முடியும் என முன்வந்தது.

ஆஸ்திரேலியாவின் ராயல் குழந்தைகள் மருத்துவமனை இதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதனைத் தொடர்ந்து அதன் மருத்தவர் இயன் மெக்கன்ஸி தலைமையில் மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள இரு குழந்தைகளும் தாய் பும்ச்சூவுடன் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

இது குறித்து இயன் கூறுகையில், ''ஒட்டி பிறந்த இரட்டையர் அறுவை சிகிச்சையில் ஒருமுறைக்கு இருமுறை அனைத்தையும் சரி பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாக உள்ளது. பலதரப்பட்ட ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டே அடுத்த வாரத்தில் சிகிச்சை செய்யப்படும்'' என அவர் தெரிவித்தார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP