வங்கதேச தேர்தல்: பிரதமர் ஷேக் ஹசீனா மாபெரும் வெற்றி!

வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமர் பதவியேற்கவுள்ளார்.
 | 

வங்கதேச தேர்தல்: பிரதமர் ஷேக் ஹசீனா மாபெரும் வெற்றி!

வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமர் பதவியேற்கவுள்ளார்.

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் நேற்று பெரும் சர்ச்சைக்கு இடையே நடைபெற்றது. பல்வேறு இடங்களில் கலவரங்கள், வாக்குச் சாவடிகளில் மோசடி குற்றச்சாட்டுகள், போலீசார் துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவைக்கு நடுவே, 300 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இதில் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் ஆதரவாளர்களுக்கும், ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இதில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மாலை 4 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 260 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவாமி லீக் தலைமையிலான பெரிய கூட்டணி 266 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜதியா கட்சி, 20 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர் கூட்டணியான தேசிய ஒற்றுமை கூட்டணி வெறும் ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் கலீதா ஜியா, ஊழல் வழக்குகளில் 17 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் ஹசீனா, 2,29,539 ஓட்டுகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் வெறும் 123 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

1996, 2009, 2014ம் ஆண்டு தேர்தல் வெற்றிகளுக்கு பிறகு, தற்போது 4வது முறையாக அந்நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்கிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP