ஏமன்: மசூதியில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி !

ஏமன் நாட்டில் உள்ள மசூதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர். சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
 | 

ஏமன் நாட்டில், அசாரிக் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் மசூதியில் நுழைந்து, திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.  சிலர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதோடு, அவர்களுடன் 3 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.  தகவல் அறிந்த போலீசாரும், மீட்பு படையினரும் படுகாயம் அடைந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த தாக்குதல்  குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP