தஜிகிஸ்தான் சிறையில் வன்முறை- 32 பேர் பலி

தஜிகிஸ்தான் நாட்டிலுள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையால் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

தஜிகிஸ்தான் சிறையில் வன்முறை- 32 பேர் பலி

தஜிகிஸ்தான் நாட்டிலுள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையால் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள வஹாத் என்ற நகரில் உள்ள சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த கைதிகள் சிலர் அங்கிருந்த சிறைக்காவலர்கள் 3 பேரையும் சக கைதிகள் 5 பேரையும் கத்தியால் குத்தி கொன்றனர்.

இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த உயரதிகாரிகள் சிறைக்குள் விரைந்து வந்தனர். அதற்குள் சிறைச்சாலைக்குள் வன்முறை வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் சிறைக்காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த கலவரத்தில் மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சிறைச்சாலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP