Logo

ஜப்பானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 150யை எட்டுகிறது!

ஜப்பானில் பெய்து வரும் கனமழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 150 யை எட்டும் நிலையில் உள்ளது.
 | 

ஜப்பானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 150யை எட்டுகிறது!

ஜப்பானில் பெய்து வரும் கனமழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 150 யை எட்டும் நிலையில் உள்ளது.

ஜப்பான் நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 800 வீடுகள் வரை நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை ஜப்பான் வரலாற்றில் இப்படியொரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில்லை. ஹிரோஷிமா மாகாணத்தில் தான் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. 

மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். கொட்டும் மழையிலும் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணியை பொறுத்தவரை காவல்துறையினர், மீட்புப் படையினர், தீயணைப்பு துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் என 48,000 பேர் வரையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. எகிமா குரோஷிமா,கியோட்டா ஆகிய நகரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், 100க்கும் அதிகமானோரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP