சிங்கப்பூர்: மனைவியை கத்தியால் கொடூரமாக குத்திய இந்திய வம்சாவளி

சிங்கப்பூர்: மனைவியை கத்தியால் கொடூரமாக குத்திய இந்திய வம்சாவளி
 | 

சிங்கப்பூர்: மனைவியை கத்தியால் கொடூரமாக குத்திய இந்திய வம்சாவளி


சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயசீலன் என். சந்திரசேகர் (29), தனது மனைவி மயூரி கிருஷ்ணகுமாரை (26), வயிற்றில் இருமுறையும், முதுகில் இருமுறையும் கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளதாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கடுமையான காயங்களால் மயூரி அவதிப்பட்டுள்ளார் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

"மயூரி என்னுடைய மனைவி. அவள் செய்த தப்பிற்காக நான் கத்தியால் குத்தியது எனது தவறு தான். ஆனால், அவளை இரண்டு முறைக்கு மேல் கத்தியால் குத்தவில்லை. என் மனைவியை இப்படி செய்வேன் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அவள், எனக்கும் குழந்தைக்கும் இப்படி செய்திருக்க கூடாது" என்று ஜெயசீலன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 


இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்யப்பட்டிருந்த வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவத்தை நேரில் கண்டவர் வீடியோ எடுத்துள்ளார். இதனை அடுத்து, போலீசார் ஜெயசீலனை கைது செய்துள்ளனர். 

அறிக்கையின்படி, மயூரி ஜெயசீலனை விட்டு பிரிந்து, வேறொருவருடன் வாழ விரும்பியதாக தெரிகிறது. சம்பவம் நடந்த அன்றும், இருவருக்குமிடையில் இது குறித்த மோதல் தான் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

ஜெயசீலன், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மனநல நிறுவனத்திடம் இருந்து நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலும் ஜெயசீலன் கூச்சலிட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதனால், ஜெயசீலன் மனநல நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அவரின் மனநலம் மதிப்பீடு செய்யப்பட்டு, வருகிற 15ந்தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். ஜெயசீலன் குற்றவாளி என நிரூபணமானால், 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெறுவார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP