பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

ஜி- 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஒசாகா நகரில் பிரிக்ஸ் நாடுக்ளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 | 

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

ஜி- 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஒசாகா நகரில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஜி- 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜப்பான் சென்றார். ஜப்பான் ஒசாகா நகரில் அவருக்கு ஜப்பான் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள இந்திய மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

முதலாவதாக ஜப்பானில் உள்ள இந்திய வம்சாவளிகள் முன்னிலையில் உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக, இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். JAI (Japan -America- India) என்றாலே வெற்றி தான் என்று கூறினார். 

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

தொடர் நிகழ்வாக, ஜப்பான் ஒசாகா நகரில் பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராம்போஸா ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிகாரபூர்வமற்ற முறையில் இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்-யும் தனி யே சந்தித்துப் பேசவிருக்கிறார். பல நாட்டுத் தலைவர்களை ஒரே இடத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசுவதன் மூலம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் தரம் மேலும் உயரவும், பல நாடுகளுடன் உள்ள சிறந்த நட்புறவை மேம்படுத்த உதவும் என்றே கருதப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP