மனிதர்களின் உறுப்பு மாற்றுக்கு உதவும் பன்றிகள்!

ஜப்பான் விஞ்ஞானிகள் உறுப்பு மாற்றுக்காக விஷேசமாக பன்றிகளை உருவாக்கி அதன் உறுப்புகளை மனிதர்களுக்கு பயன்படுத்தியுள்ளனர்.
 | 

மனிதர்களின் உறுப்பு மாற்றுக்கு உதவும் பன்றிகள்!

மனிதர்களின் உறுப்பு மாற்றுக்கு உதவும் பன்றிகள்!

ஜப்பான் விஞ்ஞானிகள் உறுப்பு மாற்றுக்காக விஷேசமாக பன்றிகளை உருவாக்கி அதன் உறுப்புகளை மனிதர்களுக்கு பயன்படுத்தியுள்ளனர்.

மனித உடல் உறுப்புக்களுடன் பன்றிகளின் சில உடல் உள் உறுப்புக்கள் ஒத்துப்போவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலம் இந்த உறுப்புக்களை செயலிழக்கச் செய்வதற்கான வாய்ப்பு அதிகம். இந்த சூழ்நிலையில், டோக்கியாவில் உள்ள மெய்ஜி பல்கலைக்கழகம் மற்றும் கியோடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து மனித உடலுக்கு ஏற்ற வகையில் பன்றிகளை உருவாக்கி உள்ளனர்.

இந்த பன்றிகளின் உறுப்புக்களை எடுத்து, நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு வெற்றிகரமாக பொருத்தி, அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த உறுப்புக்களை முன்பு போல் இல்லாமல், மனித உடல் நோய் எதிர்ப்பு மண்டலம் எதிர்ப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதையும் உறுதி செய்தள்ளனர்.

ஆனால், ஜப்பானில் இத்தகைய உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெறுவதில்லை. மாறாக, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்குத் தேவையான வகையில் விசே‌ஷமாக பன்றிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. ஒரு சுத்தமான, தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. தேவைப்படும் நபர்களுக்கு பொருத்த இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

மனிதர்களின் உறுப்பு மாற்றுக்கு உதவும் பன்றிகள்!

நோய் விளைவிக்கும் வைரஸ்கள் இல்லாத நல்ல நிலையில் பன்றிக் குட்டிகளை உருவாக்கினர். அவற்றை நன்கு சுத்தமாக பராமரித்து, அவற்றுக்கு செயற்கை பாலூட்டி வளர்த்தனர். அவைகள் 1.8 கிலோ எடை வந்தவுடன் அவற்றின் உடல் உறுப்புகளை எடுத்து மனிதர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தினர். 2016-ம் ஆண்டில் ஜப்பான் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறைகளின் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறையின் கீழ் இத்தகைய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP