பிலிப்பைன்ஸ்- கனமழைக்கு 68 பேர் பலி

பிலிப்பைன்சில் பெய்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 68 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சில நாட்களுக்கு மழை தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 | 

பிலிப்பைன்ஸ்- கனமழைக்கு 68 பேர் பலி

பிலிப்பைன்சில் பெய்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 68 பேர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ்  நாள் முதல் முதல் பெய்து வந்த மழை தீவிரமடைந்து, கன மழையாக மாறியது. இந்த நிலையில், அந்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில், 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்த மக்களுக்கு மழைவெள்ளம் பேரிடியாக அமைந்துள்ளது.

போலீசார் மற்றும் அரசு அமைப்புகளை சேர்ந்த மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சில நாட்களுக்கு மழை தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ‌
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP