எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலில் நிற்க தடை: புடின் அதிரடி

எதிர்க்கட்சித் தலைவருக்கு தடை விதித்தார் புடின்
 | 

எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலில் நிற்க தடை: புடின் அதிரடி


ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தார். இதில் அவர் போட்டியிட்டால், தொடர்ந்து 2024ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார். ஏற்கனவே, அதிபர் பதவிக்காலம் முடிந்து, பிரதமராக இருந்து ஆட்சியை தக்க வைத்து மீண்டும் அதிபராகியுள்ள புடின், தனது எதிர்கட்சி வேட்பாளர்களை போட்டியிட விடாமல் சதி செய்வதாக பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

அவரை பெரிதும் எதிர்த்த எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர் போரிஸ் நெம்ஸ்ஸ்டாவ், மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு ரஷ்ய உளவுத்துறை தான் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், அவரது நண்பர் அலெக்ஸெய் நவால்னி, முன்னின்று புடினுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார். புடினை எதிர்த்து, அவர் தேர்தலில் நிற்கவுள்ளதாகவும் கூறியிருந்தார். 

அதை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் அவர் ஒரு பெரிய போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த போது, கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைதனதால், அவர் தேர்தலில் நிற்க தகுதி இழந்துவிட்டதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP